செல்லிடப்பேசி பழுது நீக்கும் பயிற்சி பெற நாளைக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 14th June 2019 10:34 AM | Last Updated : 14th June 2019 10:34 AM | அ+அ அ- |

பெங்களூரில் செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி பெற ஜூன் 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்ஸ்ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பல்ஸ்ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் 4 வாரகால செல்லிடப்பேசி பழுதுநீக்கும் வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி ஜூன் 17-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
பயிற்சியின்போது செல்லிடப்பேசி மென்பொருள், வன்பொருள் பழுதுநீக்குதல் போன்றவை கற்றுத் தரப்படும். ஸ்மார்ட்போன் உள்ளிட்ட அனைத்து செல்லிடப்பேசிகளின் பழுதையும் நீக்குவது கற்பிக்கப்படும். வெளியூர் மாணவர்களுக்கு இலவச தங்கும் விடுதி வசதி வழங்கப்படுகிறது.
பயிற்சி மாணவர்களுக்கு இலவசமாகப் பாடநூல்கள், கருவிகள் பெட்டி, மென்பொருள்கள் வழங்கப்படும். பயிற்சியில் சேர பியூசி தேர்ச்சி அல்லது தோல்வி, பட்டயம், வேலைவாய்ப்புப் பயிற்சி பெற்றிருத்தல் அவசியம்.
பயிற்சியில் சேர ஜூன் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9535142052, 9845102923 என்ற செல்லிடப்பேசிகளில் அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.