லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது
By DIN | Published On : 14th June 2019 10:33 AM | Last Updated : 14th June 2019 10:33 AM | அ+அ அ- |

மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றதாக, மின்வாரிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
சிக்மகளூரு மாவட்டத்துக்குள்பட்ட ஜெயநகரைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்குமாறு மெஸ்காம் மின்வாரிய அலுவலகத்திற்கு மனு அளித்துள்ளார்.
இந்த மனுவைப் பரிசீலித்த மெஸ்காம் மின்வாரிய அலுவலக உதவிப் பொறியாளர் ராகவேந்திரா, ரூ. 8 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டாராம்.
இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து ராகவேந்திரா புதன்கிழமை கொடுத்தபோது, அவரை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படையினர் கைது செய்தனர்.