ஆன்டி-சாட்டிலைட் மிசைல் திட்டம்: பிரதமர் மோடிக்கு எடியூரப்பா பாராட்டு
By DIN | Published On : 28th March 2019 09:04 AM | Last Updated : 28th March 2019 09:04 AM | அ+அ அ- |

ஆன்டி-சாட்டிலைட் மிசைல் திட்டத்தை வெற்றிகரமாக சோதனை செய்து சாதனை படைத்தமைக்கு பிரதமர் மோடியை கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆன்டி-சாட்டிலைட் மிசைல் திட்டத்தை வெற்றிகரமாக சோதனை செய்து சாதனை படைத்துள்ள பிரதமர் மோடியை மனதார பாராட்டி வாழ்த்துகிறேன். பிரதமர் மோடியுடன் 'மிஷன் சக்தி' திட்டத்திற்காக உழைத்து புதன்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்த விஞ்ஞானிகளையும் பாராட்டுகிறேன். இதுசாதாரண சாதனை அல்ல. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் இது தலைசிறந்தசாதனை மட்டுமல்ல, மைல் கல்லாகும்.
ஆன்டி-சாட்டிலைட் மிசைலை சோதனை செய்து, அதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் நாம் சரிசமமாக உயர்ந்திருக்கிறோம். இந்த அரியசாதனையை படைத்தமைக்காக பிறவளர்ந்தநாடுகள் இந்தியாவை பெருமையுடன் காண்கின்றன.
சாதாரண மக்களின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், இந்தியாவுக்கு எதிராக விண்வெளி போரில் ஈடுபடும் எந்த பகைநாட்டையும் முறியடிக்கும் வல்லமையை இந்தியா பெற்றுள்ளது. இதன்மூலம், ராணுவ விவகாரங்களில் இந்தியாவை யாரும் லேசாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆன்டி-சாட்டிலைட் மிசைல் என்ற ராணுவ பாதுகாப்பு கட்டமைப்பு எதிரி நாடுகளின் தாக்குதலை எளிதில் முறியடிக்க முடியும்.
பிறநாடுகளின் ராணுவ கட்டமைப்புகளை செயலிழக்கசெய்யும் ஆற்றலும் ஆன்டி-சாட்டிலைட் மிசைலுக்கு உள்ளது. இந்திய துணைகண்டத்தில் அமைதியை நிலைநாட்டவும், 130 கோடி மக்கள் நிம்மதியாக வாழவும் இந்த துணிச்சல் மிகுந்த சாதனை துணைநிற்கும் என்றார்.
வள்ளலார்-திரு.வி.க. சிறப்பு சொற்பொழிவு
பெங்களூரு, மார்ச் 27: திருவள்ளுவர் சங்கம் சார்பில் பெங்களூரில் மார்ச் 31-ஆம் தேதி தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அறக்கட்டளை மற்றும் வள்ளலார் அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவுக் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து திருவள்ளுவர் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளுவர்சங்கத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அறக்கட்டளை மற்றும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அறக்கட்டளை சார்பில் பெங்களூரு, ஸ்ரீராமபுரம், தயானந்த்நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் மார்ச் 31-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார்-வள்ளலார் இராமலிங்க அடிகளார் சிறப்பு சொற்பொழிவுக்கூட்டம் நடக்கவிருக்கிறது.
விழாவுக்கு சங்கத் தலைவர் ப.இளவழகன் தலைமை வகிக்க, வே.அரசு முன்னிலை வகிக்க, சங்கச் செயலாளர் எம்.ஆர்.பழம்நீ வரவேற்புரை ஆற்றுகிறார். "இலக்கணத்தில் தமிழ்மரபுச் சிதைவுகள்' என்ற தலைப்பில் பேராசிரியர் தா.கிருட்டிணமூர்த்தி சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் அனைவரும்பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...