மேலும் 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
By DIN | Published On : 30th March 2019 09:19 AM | Last Updated : 30th March 2019 09:19 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மேலும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் மண்டியா நீங்கலாக எஞ்சியுள்ள 27 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. மண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பாஜக ஆதரவளித்துள்ளது. இத்தொகுதியை தவிர 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக
அறிவித்துள்ளது.
மார்ச் 21-ஆம் தேதி 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்த பாஜக அடுத்தடுத்து 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வெளியிட்டிருந்தது.இந்நிலையில், சிக்கோடி, ராய்ச்சூரு, கொப்பள் ஆகிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெள்ளிக்கிழமை பாஜக அறிவித்துள்ளது.
கொப்பள் தொகுதியின் எம்பி சங்கண்ணாகரடிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ராய்ச்சூரு தொகுதிக்கு ராஜா அம்ரேஷ்நாயக், சிக்கோடி தொகுதிக்கு அன்னா சாஹெப்ஜொள்ளே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கும், மஜத போட்டியிடும் 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தார்வாட் தொகுதி நீங்கலாக 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...