குமாரசாமியுடனான சந்திப்பை தவிர்த்த சித்தராமையா!

ஒரே கட்டடத்தில் இருந்தும் முதல்வர் குமாரசாமியுடனான சந்திப்பை முன்னாள் முதல்வர் சித்தராமையா தவிர்த்துள்ளார்.

ஒரே கட்டடத்தில் இருந்தும் முதல்வர் குமாரசாமியுடனான சந்திப்பை முன்னாள் முதல்வர் சித்தராமையா தவிர்த்துள்ளார்.
குந்தகோலா, சின்சோளி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கூட்டணி கட்சிகள் உள்ளன.தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். 
2 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் குமாரசாமி பிரசாரம் செய்ய முடிவு செய்து ஹுப்பள்ளிக்கு சென்று, அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை தங்கியுள்ளார். அந்த ஹோட்டலின் 6-வது மாடியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுன் தங்கியிருந்தார். அண்மையில் சித்தராமையாவை, மஜத மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத் விமர்த்திருந்த நிலையில், முதல்வர் குமாரசாமியும், சித்தராமையாவும் நேரில் சந்தித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால், ஒரே கட்டடத்தில் இருந்தும் முன்னாள் முதல்வர் சித்தராமையா, முதல்வர் குமாரசாமியுடனான சந்திப்பை தவிர்த்துள்ளார். சித்தராமையா தன்னை சந்திப்பதை தவிர்ப்பதை அறிந்த முதல்வர் குமாரசாமி, தானே தொலைபேசியில் சித்தராமையாவுடன் தொடர்பு கொண்டு சுமார் 10 நிமிடம் பேசியுள்ளார். அப்போது மஜத மாநிலத்தலைவர் எச்.விஸ்வநாத்தின் விமர்சனத்துக்கு முதல்வர் குமாரசாமி வருத்தம் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com