தம்பதி வெட்டிக் கொலை
By DIN | Published On : 15th May 2019 08:11 AM | Last Updated : 15th May 2019 08:11 AM | அ+அ அ- |

மைசூரு அருகே தோட்டத்தில் தங்கியிருந்த மூத்த தம்பதியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
மைசூரு நாகவலா பகுதியில் உள்ள தோட்டத்தில் வசித்து வந்தவர் ஈரத்தண்ணா (80). இவரது மனைவி சிவம்மா (75). திங்கள்கிழமை நள்ளிரவு தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஈரத்தண்ணா, சிவம்மா இருவரையும் ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இதுகுறித்து இலவாலா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.