புதிதாக முதல்நிலைக் கல்லூரிகள் தொடங்க 425 பேர் விண்ணப்பிப்பு
By DIN | Published On : 15th May 2019 08:13 AM | Last Updated : 15th May 2019 08:13 AM | அ+அ அ- |

நடப்பு கல்வியாண்டில் புதிதாக முதல்நிலைக் கல்லூரிகள் தொடங்க 425 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கல்வித் துறை இயக்குநர் ஷிகா செய்தியாளர்களிடம் கூறியது: மாநில அளவில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 1,231 முதல் நிலைக் அரசு கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரிகளைவிட, தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது.
2010-11-ஆம் ஆண்டில் கல்வியாண்டில் 1,737-ஆக இருந்த தனியார் கல்லூரிகள், 2018-19-ஆம் ஆண்டில் 3,194-ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக முதல்நிலைக் கல்லூரிகள் தொடங்க 425 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் தென் பெங்களூரில் கல்லூரிகள் தொடங்க அதிக பேர் விண்ணப்பித்துள்ளனர். வட கர்நாடகம், குடகு மாவட்டங்களில் குறைந்தபட்சமாக ஒரு விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன என்றார்.