சிறப்பு இசை, நாட்டியம், தாளவாத்திய தேர்வு: நுழைவுச் சீட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
By DIN | Published On : 19th May 2019 09:23 AM | Last Updated : 19th May 2019 09:23 AM | அ+அ அ- |

சிறப்பு இசை, நாட்டியம் மற்றும் தாளவாத்தியப் பாடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2019-ஆம் ஆண்டுக்கான சிறப்பு இசை, நாட்டியம், தாளவாத்தியப் பாடங்களுக்கான தேர்வை நடத்த கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இப்பாடங்களுக்கான முதுநிலை, முன்சிறப்புநிலை, சிறப்புநிலை இறுதி எழுத்துத் தேர்வு மே 25, 26 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வும், மே 27-ஆம் தேதி செய்முறை தேர்வும் நடைபெறுகிறது.
இத்தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பங்களை செலுத்தியவர்கள் www.kseeb.kar.nic.in என்ற இணையதளத்தில் இருந்து நுழைவுச் சீட்டுகளை தரவிறக்கம் செய்துகொண்டு, தேர்வு எழுதலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.