மே 22-இல் பன்னாட்டு பல்லுயிர் தினவிழா
By DIN | Published On : 19th May 2019 09:21 AM | Last Updated : 19th May 2019 09:21 AM | அ+அ அ- |

கர்நாடக மாநில அரசு சார்பில் பன்னாட்டு பல்லுயிர் தினவிழா கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கர்நாடக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கர்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமியின் சார்பில் பன்னாட்டு பல்லுயிர் தினவிழா பெங்களூரில் உள்ள அகாதெமியின் அரங்கத்தில் மே 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
"நமது பல்லுயிர், நமது உணவு, நமது சுகாதாரம்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விழாவில் ஆர்வமுள்ள வேளாண், தோட்டக்கலை, அடிப்படை அறிவியல் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த தலைப்பில் நடைபெறும் எழுத்துப்பூர்வமான விநாடி-வினா, புகைப்படப் போட்டிகளிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்க கட்டணம் எதுவுமில்லை. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பங்கேற்பாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
வெற்றிபெறுவோருக்கு ரூ.1.35 லட்சத்தில் பரிசுகள் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, வி.கே.ஸ்ரீனிவாசு-9620767819 என்ற செல்லிடப்பேசியில் எண்ணில் அழைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.