கர்நாடக பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
By DIN | Published On : 26th May 2019 05:13 AM | Last Updated : 26th May 2019 05:13 AM | அ+அ அ- |

பொறியியல், பிஎஸ்சி (விவசாயம், கால்நடை, பட்டுவளர்ப்பு, காடுவளர்ப்பு, தோட்டக்கலை), பி.ஃபார்ம், டி.ஃபார்ம் பட்டப் படிப்புகளுக்கான கர்நாடக பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத் தேர்வில் பெங்களூரைச் சேர்ந்த மாணவர்கள் தர வரிசையில் சிறப்பிடங்களை பெற்றுள்ளனர்.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக தேர்வு ஆணைய அலுவலகத்தில் சனிக்கிழமை 2019-20-ஆம் ஆண்டுக்கான பொறியியல், பிஎன்ஒய்எஸ் (இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல்), பிஎஸ்சி (விவசாயம், பட்டுவளர்ப்பு, காடுவளர்ப்பு, தோட்டக்கலை), பிவிஎஸ்சி (கால்நடை), மருந்தியல் (பி.ஃபார்ம்/ஃபார்ம்.டி) படிப்புகளில் சேர தகுதியான மாணவர்களை தெரிவுசெய்வதற்கு கர்நாடக தேர்வு ஆணையம் நடத்திய கர்நாடக பொது நுழைவுத் தேர்வின் முடிவுகளை உயர்கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா வெளியிட்டார். அப்போது ஆணையத்தின் செயல் இயக்குநர் ஆர்.கிரீஷ், நிர்வாக அதிகாரி எம்.ஷில்பா உடனிருந்தனர்.
இந்த தேர்வில் பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை தவிர, மங்களூரு, பெல்லாரி மைசூரு, தாவணகெரே, ஹாசன், சிவமொக்கா மாணவர்கள் அனைத்துப் பிரிவுகளிலும் முதல் 10 இடங்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
பொறியியல் பாடப் பிரிவில் பெங்களூரின் ஸ்ரீசைதன்யா டெக்னோ (மாரத்தஹள்ளி கிளை) மாணவர் ஜெஃப்பின் பிஜு முதலிடம் பெற்றுள்ளார். பிஎன்ஒய்எஸ் பாடப் பிரிவில் பெங்களூரின் ஸ்ரீசைதன்யா டெக்னோ (மாரத்தஹள்ளி கிளை) மாணவர் பி.மகேஷ் ஆனந்த் முதலிடம் பெற்றுள்ளார். இவர், பிவிஎஸ்சி பாடப் பிரிவிலும் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பிஎஸ்சி பாடப் பிரிவில் பெங்களூரின் (ராஜாஜி நகர்) நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி கீர்த்தனா எம்.அருண், பி.ஃபார்ம்/ஃபார்ம்.டி பாடப் பிரிவில் பெங்களூரின் ஸ்ரீசைதன்யா டெக்னோ (மாரத்தஹள்ளி கிளை) மாணவி கே.சாய்சாகேதிக சகுரி முதலிடம் பெற்றுள்ளார். இவர், பொறியியல் பாடப் பிரிவில் 3-ஆம் இடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா கூறியது: கர்நாடக பொது நுழைவுத் தேர்வு-2019, கடந்த ஏப். 29, 30 ஆகியதேதிகளில் நடத்தப்பட்டன. இத்தேர்வெழுத 1,94,308 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 431 மையங்களில் 1,80,315 மாணவர்கள் தேர்வு எழுதினர். தரவரிசை தயாரிக்கப்பட்டவுடன் பொறியியல் பிரிவில் 1,40,957, விவசாயப் பிரிவில் (பிஎஸ்சி) 1,13,294, கால்நடை பராமரிப்பு பிரிவில் (பிவிஎஸ்சி) 1,18,045, மருந்தியல் பிரிவில் பி.ஃபார்ம்-க்கு 1,46,546, ஃபார்ம்-டி-க்கு 1,46,759, இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் பாடப் பிரிவில் 1,17,947 மாணவர்களும் சேர்க்கைக்கு தகுதிபெற்றுள்ளனர்.
பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் ட்ற்ற்ல்://ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய், ட்ற்ற்ல்://ஸ்ரீங்ற்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய், ட்ற்ற்ல்://ந்ஹழ்ழ்ங்ள்ன்ப்ற்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய் ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இணையதளங்களில் பாடவாரியாக மதிப்பீடுகளை மாணவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மருத்துவம், பல்மருத்துவம், ஹோமியோபதி, இந்திய மருத்துவப் பாடங்களுக்கான கல்லூரிகளில் சேர்க்கை அளிக்க தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளின் அடிப்படையில் முடிவுசெய்வோம். அதேபோல, கட்டடக் கலைஞர் பட்டப் படிப்புக்கு நாட்டா/ஜேஇஇ-2 முடிவுகளின் அடிப்படையில் சேர்க்கைக்கு தகுதியானவர்களை முடிவுசெய்வோம். நீட் மற்றும் நாட்டா தேர்வுமுடிவுகளை இணையதளம் வழியாக அறிந்துகொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.
சாதாரண பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 28 உதவி மையங்களில் (தாவணகெரே, பெல்லாரி, ராய்ச்சூரு, கலபுர்கி, விஜயபுரா, பெலகாவி, தார்வாட், கார்வார், மங்களூரு, சிவமொக்கா, ஹாசன், மைசூரு, தும்கூரு, பீதர், கொப்பள், சித்ரதுர்கா, ஹாவேரி, கதக், யாதகிரி, பாகல்கோட், சிக்மகளூரு, மடிக்கேரி, சாமராஜ்நகர், மண்டியா, ராம்நகரம், சிக்பளாப்பூர், கோலார்) அசல் சான்றிதழ்களை சரிபார்க்கலாம். இதற்கான கால அட்டவணை இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.
மாணவர்கள் சொந்த மாவட்டம் அல்லது இரண்டாமாண்டு பியூசி தேர்வு எழுதிய மாவட்டத்தில் தான் ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பாடப் பிரிவு வாரியாக முதல் பத்து இடங்கள் பெற்றவர்கள்
பொறியியல்
1. ஜெஃப்பின் பிஜு-ஸ்ரீசைதன்ய டெக்னோ,
மாரத்தஹள்ளி, பெங்களூரு
2. ஆர்.சின்மய்-எக்ஸ்பெர்ட் பியூ கல்லூரி, மங்களூரு
3. சாய் சாகேதிக செகுரி-ஸ்ரீ சைதன்ய டெக்னோ,
ராமமூர்த்தி நகர், பெங்களூரு
4. நகுல நீரஜே-நேரு ஸ்மாரகா வித்யாலயா, பெங்களூரு
5. சமர்த் மய்யா-எக்ஸ்பெர்ட் பியூ கல்லூரி, மங்களூரு
6. வைஷ்ணவி வி.ராவ்-தீக்ஷô சிஎஃப்எல்பியூ
கல்லூரி, பெங்களூரு
7. சி.எஸ்.சாய்விஷ்ணு-சங்கல்ப் பியூ கல்லூரி, பெல்லாரி
8. நீரஜ் கே.உடுபா-நாராயணா பியூ கல்லூரி,
ஹுலிமாவு சாலை, பெங்களூரு
9. கெவின் மார்ட்டின்-நேரு ஸ்மாரகா வித்யாலயா,
பெங்களூரு
10. அனிருத் புக்கென்-நாராயணா இ-டெக்னோ
பள்ளி, மாரத்தஹள்ளி, பெங்களூரு
விவசாயம் (பிஎஸ்சி)
1. கீர்த்தனா எம்.அருண்-நேஷனல் பப்ளிக் பள்ளி,
ராஜாஜி நகர், பெங்களூரு
2. வி.பி.புவன்-எக்ஸ்பெர்ட் பியூ கல்லூரி, மங்களூரு
3. எம்.எல்.ஸ்ரீகாந்தா-மாஸ்டர்ஸ் பியூ கல்லூரி, ஹாசன்
4. ஆர்.சரத் சந்திரா-ஸ்ரீ அரபிந்தோ பியூ கல்லூரி,
சிவமொக்கா
5. என்.ஸ்ரீதர்-செளந்தர்யா பியூ கல்லூரி, பெங்களூரு
6. ரோஹித்ராஜ்-எஸ்.ராமகிருஷ்ணா
பியூ கல்லூரி, மைசூரு
7. ஜே.சுதேஷ் கெளடா-எக்ஸ்பெர்ட் பியூ கல்லூரி,
மங்களூரு
8. ஜி.தீர்த்தபிரசாத்-ஸ்ரீசைதன்யா டெக்னோ,
கே.ஆர்.புரம், பெங்களூரு
9. யஷ் பன்னூர்-எக்ஸ்பெர்ட் பியூ கல்லூரி, மங்களூரு
10. எஸ்.தர்ஷன் சமர்த்தா-ஆல்வாஸ் பியூ கல்லூரி,
மங்களூரு
கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி)
1. பி.மகேஷ் ஆனந்த்-ஸ்ரீசைதன்யா டெக்னோ,
மாரத்தஹள்ளி, பெங்களூரு
2. உதித்மோகன்-நாராயணா இ-டெக்னோ பள்ளி,
வர்ஜோ நகர், பெங்களூரு
3. பி.வி.எஸ்.என்.சாய்ராம்-ஸ்ரீசைத்தன்யா
டெக்னோ, மாரத்தஹள்ளி, பெங்களூரு
4. வி.வாசுதேவா-பேஸ் பியூ கல்லூரி, மைசூரு
5. எஸ்.லிகிதா-நாராயணா பியூ கல்லூரி,
சஹகார் நகர், பெங்களூரு
6. மதுலிகா எஸ்.ஜெயதேவ்-நாராயணா பியூ கல்லூரி,
ஹர்லூர் சாலை, பெங்களூரு
7. சுனில் எஸ்.பாட்டீல்-விஷன் பியூ கல்லூரி, பெங்களூரு
8.வருண் ராகவேந்திர ஐதால்-ஸ்ரீசைதன்யா டெக்னோ, நாகர்பாவி, பெங்களூரு
9. அவனிஷ்ஹரிஷ்-ஆர்.வி. பியூ கல்லூரி, பெங்களூரு
10. வித்யாசாகர்-வைஷ்ணவி சேத்தனா பியூ கல்லூரி,
தாவணகெரே
இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல்
1. பி.மகேஷ் ஆனந்த்-ஸ்ரீசைதன்யா டெக்னோ,
மாரத்தஹள்ளி, பெங்களூரு
2. வி.வாசுதேவா-பேஸ் பியூ கல்லூரி, மைசூரு
3. உதித்மோகன்-நாராயணா இ-டெக்னோ பள்ளி,
வர்ஜோ நகர், பெங்களூரு
4. சுனில் எஸ்.பாட்டீல்-விஷன் பியூ கல்லூரி, பெங்களூரு
5. வருண் ராகவேந்திர ஐதால்-ஸ்ரீசைதன்யா
டெக்னோ, நாகர்பாவி, பெங்களூரு
6. வி.பி.புவன்-எக்ஸ்பெர்ட் பியூ கல்லூரி, மங்களூரு
7. சி.ஏ.ஆஷய் ஜெயின்-எக்ஸ்பெர்ட் பியூ கல்லூரி,
மங்களூரு
8. மதுலிகா எஸ்.ஜெயதேவ்-நாராயணா பியூ கல்லூரி,
ஹர்லூர் சாலை, பெங்களூரு
9. அவனிஷ்ஹரிஷ்-ஆர்.வி. பியூ கல்லூரி, பெங்களூரு
10. வித்யாசாகர்-வைஷ்ணவி சேத்தனா பியூ கல்லூரி,
தாவணகெரே
மருந்தியல்
1. சாய் சாகேதிக செகுரி-ஸ்ரீ சைதன்ய டெக்னோ,
ராமமூர்த்தி நகர், பெங்களூரு