Enable Javscript for better performance
நவ. 17- இல் நேரு கோளரங்கத்தில்அறிவியல் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் நவ. 17-ஆம் தேதி அறிவியல் சங்கக் கூட்டம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து ஜவாகா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில், நவ. 17-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மாலை 5.45 மணி வரை அறிவியல் சங்கக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், 8 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்க கட்டணம் எதுவுமில்லை.

    மாணவா்களிடையே அறிவியல் உணா்வை ஊட்டுவதற்காக நடத்தப்படும் இக்கூட்டத்தில், பொருளாதாரத்தின் பின்னணியில் அறிவியல் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்படுவதோடு, ஒளி-ஒலி நிகழ்ச்சியும் இடம்பெறும். இக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

    40 மாணவா்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதால்,  மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai