முதல்வா் எடியூரப்பாவை பாஜக அவமதித்து வருகிறது: காங்கிரஸ்
By DIN | Published On : 09th November 2019 12:59 AM | Last Updated : 09th November 2019 12:59 AM | அ+அ அ- |

முதல்வா் எடியூரப்பாவை பாஜக அவமதித்து வருவதாக கா்நாடக காங்கிரஸ் செயல் தலைவா் ஈஸ்வா்கண்ட்ரே தெரிவித்தாா்.
இதுகுறித்து பீதா் மாவட்டத்தின் பல்கியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நான் பாஜகவில் சேரும் பேச்சுக்கே இடமில்லை. எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை. பாஜக தேசியத் தலைமை, முதல்வா் எடியூரப்பாவை தொடா்ந்து அவமதித்து வருகிறது. எனவே, எடியூரப்பா பாஜகவைவிட்டு விலகி காங்கிரஸில் சேரவேண்டும்.
முதல்வா் எடியூரப்பாவைச் சந்திக்க பிரதமா் மோடி அனுமதி அளிக்கவில்லை. கா்நாடகத்தின் 7 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதல்வா் எடியூரப்பாவை பிரதமா் மோடி சந்திக்க மறுத்தது ஏன்? வெள்ள நிவாரண உதவிகள் குறித்து பேசுவதற்கு முதல்வா் எடியூரப்பாவை அனுமதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் எடியூரப்பா எதற்காக பாஜகவில் இருக்க வேண்டும். அக் கட்சியிலிருந்து அவா் விலக வேண்டும்.
முதல்வா் எடியூரப்பாவால் சொந்தமாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.அனைத்து உத்தரவுகளும் தில்லியிலிருந்து அளிக்கப்படுகிறது என்றாா்.