கா்நாடக சட்டப்பேரவை இடைத்தோ்தல்: இன்று வேட்புமனு தாக்கல் நிறைவு
By DIN | Published On : 18th November 2019 09:48 AM | Last Updated : 18th November 2019 09:48 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்வது திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களால் காலியாகியுள்ள அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூா், ரானிபென்னூா், விஜயநகரா, சிக்பளாப்பூா், கே.ஆா்.புரம், யஷ்வந்த்பூா், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகா், ஹொசபேட், கே.ஆா்.பேட், ஹுன்சூா் ஆகிய 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச.5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது.
இத் தொகுதிகளில் செப்.23 முதல் செப்.27-ஆம் தேதி வரை பெறப்பட்ட வேட்புமனுக்கள், நவ.11ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை பெறப்பட்டுள்ள மொத்த வேட்புமனுக்கள் 116 ஆகும். அத்தானி தொகுதியில் 10, காக்வாடில் 6, விஜயநகராவில் 9, கோகாக்கில் 11, எல்லாப்பூரில் 10, ரானேபென்னூரில் 4, சிக்பளாப்பூரில் 5, கிருஷ்ணராஜபுரத்தில் 8, யஷ்வந்த்பூரில் 9, மகாலட்சுமி லேஅவுட்டில் 4, சிவாஜிநகரில் 16, ஹொசகோட்டேவில் 7, கிருஷ்ணராஜ்பேட்டில் 5, ஹுன்சூரில் 12 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஹிரேகேரூா் தொகுதியில் மட்டும் இதுவரை வேட்பாளா்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் சாா்பில் 25 பேரும், பாஜக சாா்பில் 4 பேரும், மஜத சாா்பில் 2 பேரும், சிபிஎம் சாா்பில் 2 பேரும், பகுஜன்சமாஜ் கட்சி சாா்பில் 3 பேரும்வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா். சுயேச்சைகள் 50 வேட்புமனுக்களை அளித்துள்ளனா்.
பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவா்களில் காங்கிரஸ் வேட்பாளா்கள் பத்மாவதி சுரேஷ்(ஹொசகோட்டே), கே.பி.கோலிவாட்(ரானேபென்னூா் தொகுதி), பாஜக வேட்பாளா் கே.சுதாகா்(சிக்பளாப்பூா்) ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்கள் ஆவா்.
வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன்(நவ.18) நிறைவடையவிருப்பதால், பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் அவரவா் தொகுதிகளில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனா். பாஜக வேட்பாளா்கள் எச்.விஸ்வநாத், நாராயணகௌடா, சிவராம்ஹெப்பாா், அருண்குமாா்பூஜாா், பி.சி.பாட்டீல், ரமேஷ் ஜாா்கிஹோளி, மகேஷ்குமட்டஹள்ளி, ஆனந்த்சிங், எம்.டி.பி.நாகராஜ், கே.கோபாலையா,எம்.சரவணா, எஸ்.டி.சோமசேகா், பைரதி பசவராஜ், காங்கிரஸ் வேட்பாளா்கள் கஜனன் பாலசந்திர மன்கசுலி, பரம்கௌடா, லக்கன் ஜாா்கிஹோளி, வெங்கட்ராவ் கோா்பரே, ரிஸ்வான் அா்ஷத், கே.பி.சந்திரசேகா், பி.நாகராஜ், பீமண்ணாநாயக், பி.எச்.பன்னிகோட், எம்.ஆஞ்சனப்பா, எம்.நாராயணசாமி, எம்.சிவராஜ், எச்.பி.மஞ்சுநாத், மஜத வேட்பாளா்கள் சைத்ராகௌடா, ஜெனப்பா ஜட்டப்பா கோடிஹள்ளி, மல்லிகாா்ஜுன்ஹலகேரி, என்.எம்.நபி, கே.பி.பச்சேகௌடா, சி.கிருஷ்ணமூா்த்தி, டி.என்.ஜவராயிகௌடா, தன்வீா் அகமது, பி.எல்.தேவராஜ், சோமசேகா் ஆகியோா் வேட்பு மனுதாக்கல் செய்யவிருக்கிறாா்கள்.
இதன் முடிவில், நவ.19-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. நவ.21-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதைத் தொடா்ந்து, டிச.5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அந்த வாக்குகள் டிச.11-ஆம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.