இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை: இறுதிச்சுற்று விருப்பப் பதிவு தொடக்கம்
By DIN | Published On : 01st September 2019 05:45 AM | Last Updated : 01st September 2019 05:45 AM | அ+அ அ- |

இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இறுதிச் சுற்றுக்கான விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவுசெய்யும் நடைமுறை செப். 4-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2019-20-ஆம் ஆண்டில் இந்திய மருத்துவங்களான ஆயுர்வேதம், சித்தா, ஓமியோபதி, யுனானி போன்ற மருத்துவக் கல்வி, கால்நடை, பண்ணை அறிவியல் கல்வி மாணவர் சேர்க்கை பெறுவதற்கு முன் மாணவர்கள் தெரிவு செய்ய விரும்பும் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் பதிவுசெய்வது அவசிய
மாகும்.
முதல் இரண்டு சுற்று கலந்தாய்வுக்கு பிறகு காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காக இந்திய மருத்துவ சேர்க்கைக்கான இறுதிச்சுற்று விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளை இணையதளத்தில் பதிவு செய்யலாம். சேர்க்கை இடங்களின் கையிருப்பு மற்றும் கட்டண விவரங்கள் வெள்ளிக்கிழமை (ஆக. 30) நண்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.
செப். 4 முதல் 7-ஆம் தேதி காலை 11 மணி வரை விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளை ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.
இதனடிப்படையில், செப். 7-ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இறுதிச்சேர்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை மாணவர்கள் ஏற்றுக்கொண்டால், செப். 7-ஆம் தேதி முதல் செப். 11-க்குள் இணையதளத்தில் உறுதி செய்து கட்டணங்களை செலுத்தலாம். இதைத் தொடர்ந்து, செப். 12-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்துகொள்ளலாம். இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.