ஆயுதப்படை காவலர் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 02nd September 2019 03:45 AM | Last Updated : 02nd September 2019 03:45 AM | அ+அ அ- |

ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருபவர் திவாகர் (35). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டில் தூக்க மாத்திரைகளை விழுங்கி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நலம் தேறி வருகிறார். ஆயுதப்படையில் காவலராக பணி மாறுதல் பெறுவதற்கு முன்பு, திவாகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ நாராயணசாமியின் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.
தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜிதா முகமது மருத்துவமனைக்கு சென்று திவாகரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். திவாகர் தற்கொலை முயற்சி குறித்து துறைரீதியான விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.