மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டம்
By DIN | Published On : 02nd September 2019 03:44 AM | Last Updated : 02nd September 2019 03:44 AM | அ+அ அ- |

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெறுவதற்கான தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று ஹெரா அறக்கட்டளையின் செயல் அதிகாரி பி.முரளிதர் தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் வேலை வாய்புகளின் மிகவும் பின் தங்கியுள்ளனர். அவர்கள் வேலை வாய்ப்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் அறிவியல், கணிதம், சமூக அறிவியல், ஆங்கிலத்தை மார்க் என்ற திட்டத்தில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்புத் தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெற முடியும். முதல் கட்டமாக கர்நாடகத்தில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.