தடை செய்யப்பட்ட பொருள்களால் விநாயகர் சிலை தயாரித்து விற்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்

தடை செய்யப்பட்ட பொருட்களால் விநாயகர் சிலை தயாரித்து, விற்பனை செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது.
Updated on
1 min read

தடை செய்யப்பட்ட பொருட்களால் விநாயகர் சிலை தயாரித்து, விற்பனை செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இது குற்த்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  செப்.2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏரிகள்,  கோயில் குளங்கள், தற்காலிக குளங்கள், நடமாடும் வாகனங்களில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரங்களை  ட்ற்ற்ல்://க்ஷக்ஷம்ல்.ஞ்ர்ஸ்.ண்ய்என்ற இணையதளத்தில் காணலாம்.  கூடுதல் விவரங்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 080- 22221188 என்ற தொலைபேசியில் அணுகலாம்.
பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளைத் தயாரிப்பதற்கு,  விற்பதற்கு, கரைப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சட்ட விதிகளைமீறி தடை செய்யப்பட்ட பொருள்களான விநாயகர் சிலைகளைத் தயாரித்து, விற்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.  பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள ஏரிகள்,  கோயில் குளங்கள், தற்காலிக குளங்கள்,  நடமாடும் வாகனங்களில் தொட்டிகளில் தடை செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவிநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி கிடையாது.  பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க உரிமம் பெற வேண்டியது கட்டாயமாகும்.  உரிமங்களைப் பெறுவதற்கு ஒற்றைச்சாளர முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  பெங்களூரு மாநகராட்சி அலுவலகங்களில் இவை செயல்படுகின்றன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com