"வயதான பிறகுதான் வாழத்தோன்றுகிறது'
By DIN | Published On : 11th September 2019 10:16 AM | Last Updated : 11th September 2019 10:16 AM | அ+அ அ- |

வயதான பிறகுதான் வாழத்தோன்றுகிறது என்று மூத்த ஹிந்தி நடிகை ஜீனத் அமன் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கொலும்பியா பசுபிக் குழுமத்தினரின் மூத்த குடிமக்களுக்கான இல்லங்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: இளைஞர்களாக இருக்கும் போது, வாழ்க்கை பற்றியும், வாழுவது குறித்தும் எந்த கவலையும் இருப்பதில்லை. ஆனால், வயதான பின்புதான் அனைவருக்கும் வாழத்தோன்றுகிறது. கொலும்பியா பசுபிக் குழுமத்தினர் சர்வதேச தரத்திலான மூத்த குடிமக்கள் வசிக்கும் இல்லங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இது அவர்களின் சமூக அக்கறையை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் மூத்த குடிமக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்க்க அரசு உரிய சட்டத்தை இயற்ற வேண்டும். தனியார் பெரு நிறுவனங்களும், 65 வயது கடந்த மூத்த குடிமக்களின் பிரச்னைகளை தீர்க்க உதவ வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கொலும்பியா பசுபிக் குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி மோஹித் நிருள்ளா, கார்ஸ்டென் பெலானிச் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.