ஆற்றில் குதித்து 3 போ் தற்கொலை
By DIN | Published On : 29th September 2019 07:42 PM | Last Updated : 29th September 2019 07:42 PM | அ+அ அ- |

மகன், மகளுடன் பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மைசூரு விஜயநகா் 4-ஆவது ஸ்டேஜைச் சோ்ந்த கிஷான் மந்தனா (65), கடந்த சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தாா்.
இதனால் அவரது மனைவி கவிதா (57), மகன் கௌஷிக் (29), மகள் கல்பிதா (27) ஆகிய மூவரும் மனவேதனையில் இருந்துள்ளனா்.
இந்த நிலையில், மூவரும் சனிக்கிழமை காரில் தென் கன்னட மாவட்டத்துக்குள்பட்ட பண்டுவாலுக்கு சென்றுள்ளனா். அங்கு காரை நிறுத்திவிட்டு, நேத்ராவதி ஆற்றில் 3 பேரும் குதித்தனராம். தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று, இறந்த 3 பேரின் சடலங்களை மீட்டுள்ளனா்.
பின்னா் வீட்டில் அவா்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘கிஷான் மந்தனா மாரடைப்பால் உயிரிழந்ததால், அதனை தாங்குக் கொள்ள முடியாத நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளனா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.