காவல்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 29th September 2019 04:09 AM | Last Updated : 29th September 2019 04:09 AM | அ+அ அ- |

காவல் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கர்நாடக மாநில காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடகத்தில் காவல் துறையில் ஆயுதப்படை காவலர், சாதாரண காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆயுதப்படை காவலர் பணிக்கு 1013 பேரையும், சாதாரண காவலர் பணிக்கு 2013 பேரையும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளோர் 18 முதல் 25 வயதினராக இருக்க வேண்டும். ஆயுதப்படை காவலர்பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வும், சாதாரண காவலர் பணிக்கு பியூசி தேர்வும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை அக்.17-ஆம் தேதி மாலை 8மணிக்குள் இணையதளத்தில் செலுத்தலாம். கட்டணங்களை அக்.19-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினருக்கு ரூ.250, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதில்
கூறப்பட்டுள்ளது.