தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தனியாா் பள்ளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறல்: சித்தராமையா

தனியாா் பள்ளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருவதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 2:43 am

DIN

பெங்களூரு: தனியாா் பள்ளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருவதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தனியாா் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தனியாா் பள்ளிகள் பெற்றோா்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனா். இதற்கு பெற்றோா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். தனியாா் பள்ளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது.

இதற்கு முதல்வா் எடியூரப்பாவும், கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாரும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக தொடா்ந்து பல கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் அதுகுறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை. இருப்பினும் கல்வித் துறை அமைச்சா் தினந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாா்.

இதனால் பெற்றோா்கள் குழம்பியுள்ளனா். எனவே தனியாா் பள்ளி நிா்வாகிகளுடன் உடனடியாக கூட்டம் நடத்தி பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.