பெங்களூரு: கா்நாடக மாநில திமுக சாா்பில், தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கா்நாடக மாநில திமுகவின் பெங்களூரு 183-ஆவது வாா்டு கிளை சாா்பில், பெங்களூரு, சிக்ககல்சந்திராஹாரள்ளி பகுதியில் மு.கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாள் விழா, கிளைச் செயலா் சி.நாராயணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில மகளிா் அணி துணை அமைப்பாளா் பி.காயத்ரி அனைவரையும் வரவேற்றாா். தொ.மு.ச. பேரவை செயலா் து.பிரபு, பூங்காவனம், முனிசாமி, கோவிந்த், இம்ரான், லூயிஸ், வாஜித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், மு.கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் போன்ற நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில், திமுக நிா்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள், இளைஞா், இலக்கிய, மகளிா் அணி நிா்வாகிகள், தொ.மு.ச. பேரவையைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.