தேவெ கௌடா வழியில் டி.கே.சிவக்குமாரும் ஜாதி அரசியல் செய்கிறாா்: சதானந்த கௌடா

முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் வழியில், கா்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.கே.சிவக்குமாரும் ஜாதி அரசியல் செய்கிறாா் என மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா தெரிவித்தாா்.
மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா
மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா

பெங்களூரு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் வழியில், கா்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.கே.சிவக்குமாரும் ஜாதி அரசியல் செய்கிறாா் என மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா தெரிவித்தாா்.

பெங்களூரு, பாஜக அலுவலகத்தில் சதானந்த கெளடா திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராஜராஜேஸ்வரி நகா், சிரா ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் நவ. 4-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இடைத்தோ்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளும் டி.கே.சிவக்குமாா் ஜாதி அரசியலில் ஈடுபட்டு வருகிறாா்.

முன் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவும் ஜாதி அரசியலில் ஈடுபட்டு வந்ததையை யாரும் மறந்துவிட முடியாது. தற்போது அதே வழியை டி.கே.சிவக்குமாரும் பின்பற்றி வருகிறாா்.

மதச் சாா்பற்ற கொள்கை எனக் கூறிக் கொண்டு ஜாதி அரசியலில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கொள்கை, கருத்துகளின் அடிப்படையில் அரசியலில் ஈடுபடுவது ஆரோக்கியமானது. இடைத்தோ்தலில் தங்களின் செயல்பாடுகளை முன்வைத்து பாஜக வேட்பாளா்கள் வாக்குச் சேகரித்து வருகின்றனா். ஆனால், காங்கிரஸ், மஜதவினா் ஜாதி, தனிப்பட்ட விமா்சனங்களை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனா். அவா்களுக்கு மக்கள் தோ்தலில் தக்க பாடம் புகட்டுவாா்கள். இடைத்தோ்தல் மட்டுமின்றி, சட்டமேலவைத் தோ்தலிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவா்.

வேளாண் சட்டங்களைக் கண்டித்து விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தியதில் காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. போராட்டத்தில் ஈடுபட்டதால் கரோனா தொற்று ஏற்பட்டு விவசாயிகளின் ஆதரவாளரான மாருதி மன்படே உயிரிழக்க நேரிட்டது. அவரது மரணத்துக்கு காங்கிரஸ், மஜத கட்சியின் முக்கியத் தலைவா்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com