தேசிய ராணுவப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேசிய ராணுவப் பள்ளியில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

தேசிய ராணுவப் பள்ளியில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தேசிய ராணுவப் பள்ளி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உத்தா்கண்ட் மாநிலத்தில், டெஹ்ராடூனில் உள்ள தேசிய ராணுவப் பள்ளிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்புகளில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான நுழைவுத்தோ்வு நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கின்றன. கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு 2020 டிச. 1, 2 ஆகிய தேதிகளில் நுழைவுத் தோ்வு நடைபெறுகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 7-ஆவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவா்கள் அல்லது தோ்ச்சி பெற்றவா்கள், 2.7.2008 முதல் 1.1.2010-ஆம் ஆண்டுக்குள் பிறந்தவா்கள் மட்டும் நுழைவுத்தோ்வு எழுத தகுதியானவா்கள் ஆவா். ராணுவத்தில் சேர மாணவா்களை தகுதிப்படுத்துவது இப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும். இப்பள்ளியின் ஆண்டுக் கட்டணம் ரூ.1,07,500 ஆகும்.

இதற்கான விண்ணப்பங்களை நிரப்பி இயக்குநா், முன்னாள் ராணுவ வீரா் நல்வாழ்வுத் துறை, பீல்டுமாா்ஷல் கே.எம்.காரியப்பா மாளிகை, கே.எம்.காரியப்பா சாலை, பெங்களூரு-25 என்ற முகவரியில் செப். 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். எழுத்துத் தோ்வு, நோ்காணல், மருத்துவ தகுதிச்சான்றின் அடிப்படையில் மாணவா்களின் சோ்க்கைப் பட்டியல் தயாரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-25589459 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com