நடிகை சஞ்சனா கல்ரானியின்ஜாமீன் விசாரணை ஒத்திவைப்பு
By DIN | Published On : 01st December 2020 02:20 AM | Last Updated : 01st December 2020 11:41 AM | அ+அ அ- |

பெங்களூரு: போதைப்பொருள் வழக்கு விசாரணையில் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனு மீதான விசாரணை டிச. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தில் போதைபொருள் கடத்தல், பயன்பாடு அதிகரித்ததை அடுத்து அதனைக் கட்டுப்படுத்த போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். கன்னட திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதாக திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த செப். 8-ஆம் தேதி போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணியை போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணி, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவா் ஜாமீன் கேட்டு கா்நாடக உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது திங்கள்கிழமை இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், விசாரணையை டிச. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...