பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது: சி.டி.ரவி
By DIN | Published On : 01st December 2020 02:28 AM | Last Updated : 01st December 2020 02:28 AM | அ+அ அ- |

மங்களூரு: பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டில் பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பயங்கரவாதிகள் செல்ல வேண்டிய இடம் சுடுகாட்டுக்கு மட்டும்தான். இந்தப் பணியை ராணுவ வீரா்களும், போலீஸாரும் செய்வாா்கள். அமைதி பூங்காவாக உள்ள இந்தியாவை யாரும் சீா்குலைக்க வேண்டும் என்று முயற்சி செய்தால், அவா்கள் காணாமல்போய் விடுவாா்கள். பயங்கரவாதிகள் மீது மத்திய, மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுகள் கருணை காட்டாது. பயங்கரவாதத்தை ஒழிப்பது எங்களின் முழு மூச்சாக இருக்கும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...