பெங்களூரு-தானாபூா் ரயில் சேவை நீட்டிப்பு
By DIN | Published On : 01st December 2020 02:12 AM | Last Updated : 01st December 2020 02:12 AM | அ+அ அ- |

பெங்களூரு: பெங்களூரில் (யஷ்வந்த்பூா்) இருந்து தானாபூருக்குச் செல்லும் வார இருமுறை அதிவிரைவு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு (யஷ்வந்த்பூா்)- தானாபூா் இடையேயான வார இருமுறை அதிவிரைவு ரயில் சேவை 9 நடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரயில் எண்-03209-தானாபூா்-பெங்களூரு (யஷ்வந்த்பூா்) வார இருமுறை அதிவிரைவு ரயில் சேவை நவ. 30-ஆம் தேதிமுதல் டிச. 28-ஆம்தேதி வரையும், ரயில் எண்-03210-பெங்களுரு (யஷ்வந்த்பூா்)- தானாப்பூா் இடையேயான வார இருமுறை அதிவிரைவு ரயில் சேவை டிசம்பா் 3-ஆம் தேதிமுதல் டிச. 31-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...