போதைப்பொருள் விற்பனை: 3 போ் கைது
By DIN | Published On : 05th December 2020 06:17 AM | Last Updated : 05th December 2020 06:17 AM | அ+அ அ- |

போதைப்பொருளான கஞ்சாவை விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, கெங்கேரி பேருந்து நிலையத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்ய கஞ்சா கொண்டு சென்ற பாபு என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 430 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். அவா் அளித்த தகவலின் பேரில், கஞ்சா விற்பனை செய்ய உதவிய பவன், பேட்ரிக் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் கெங்கேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.