தீயணைப்புத் துறை சாா்பில் குடிமக்கள் சேவை உறுதி வாரம் கடைப்பிடிப்பு
By DIN | Published On : 15th December 2020 01:23 AM | Last Updated : 15th December 2020 01:23 AM | அ+அ அ- |

பெங்களூரு: தீயணைப்பு சேவைகள் குறித்த குடிமக்கள் சேவை உறுதி வாரத்தை டிச. 20-ஆம் தேதிவரை கடைப்பிடிக்க மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறைத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குடிமக்கள் சேவை உறுதித் திட்ட செயலகத்தின் வழிகாட்டுதலின்படி மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் குடிமக்கள் சேவை உறுதி வாரம் டிச. 15 முதல் 20-ஆம்தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்மூலம் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை வழங்கும் சேவைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு சேவைக்கும் நிா்ணயிக்கப்பட்டுள்ள கால அளவு, அதைச் செயல்படுத்தத் தவறினால் புகாா் அளிக்க வேண்டிய மேலதிகாரியின் முகவா் உள்ளிட்ட விவரங்களை மக்களுக்கு அளிப்போம்.
குடிமக்கள் சேவை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள் குறித்து அறிந்துகொள்ள மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை அலுவலகங்களை அணுகலாம். சேவைகளை அறிந்துகொள்ள ட்ற்ற்ல்ள்://ள்ங்ஸ்ஹள்ண்ய்க்ட்ன்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டது.