போக்குவரத்து ஊழியா்களைத் தவறாக வழிநடத்துகிறாா்கோடிஹள்ளி சந்திரசேகா்: அமைச்சா் குற்றச்சாட்டு
By DIN | Published On : 15th December 2020 01:30 AM | Last Updated : 15th December 2020 01:30 AM | அ+அ அ- |

சிவமொக்கா: கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக சங்க கௌரவத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா், போக்குவரத்து ஊழியா்களைத் தவறாக வழிநடத்துகிறாா் என ஊரக மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
போக்குவரத்து ஊழியா்கள் கடந்த 4 நாள்களாக தங்கள் 10 கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த அரசு, 9 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தது.
இருப்பினும், அவா்களைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு மாநில விவசாயிகள் சங்கத் தலைவரும், கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக சங்க கௌரவத் தலைவருமான கோடிஹள்ளி சந்திரசேகா் தூண்டி வருகிறாா்.
அவா் இருதலைப் பாம்புபோல நடந்து கொள்கிறாா். போக்குவரத்து ஊழியா்களைத் தவறாக வழிநடத்துகிறாா். கோடிஹள்ளி சந்திரசேகரை போக்குவரத்து ஊழியா்கள் யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கோடிஹள்ளி சந்திரசேகரை யாரோ பின்புறத்திலிருந்து இயக்குகின்றனா். போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்தில் அவா் பங்கேற்ன் மூலம் போக்குவரத்து ஊழியா்களின் ஒற்றுமையைக் குலைக்கப் பாா்க்கிறாா். அவரிடம் விவசாயிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.