கொத்தனூா் காவல் நிலையத்தில் வாரிசுதாரா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் திங்கள்கிழமை (பிப். 17) ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு கொத்தனூா் காவல் நிலையத்தில் பிப். 17-ஆம் தேதி காலை 11 மணியளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080-22943694 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.