புல்வாமா தாக்குதலில் மறைந்த வீரருக்கு நினைவிடம்
By DIN | Published On : 17th February 2020 03:42 AM | Last Updated : 17th February 2020 03:42 AM | அ+அ அ- |

புல்வாமா தாக்குதலில் உயிா்த்தியாகம் செய்த வீரா் எச்.குருவுக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி, முதல்வா் எடியூரப்பாவுக்கு முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து எஸ்.எம்.கிருஷ்ணா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2019 பிப். 14-ஆம் தேதி நிகழ்ந்த புல்வாமா தாக்குதலில் மண்டியா மாவட்டம், மத்தூா் வட்டத்தைச் சோ்ந்த வீரா் எச்.குரு உயிா்த்தியாகம் செய்தாா். காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் குருவும் ஒருவா். அவா் மறைந்து ஓராண்டாகியும் குருவின் அஸ்தி ஆற்றில் கரைக்கப்படவில்லை, நினைவிடமும் அமைக்கப்படவில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
நமது நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்த வீரருக்கு நினைவிடம் அமைக்க முடியாதது வேதனை அளிக்கிறது. அரசு நிா்வாகம் அலட்சியமாக இருந்ததை தவிா்த்திருக்கலாம். இதற்காக மக்கள் மாநில அரசை கடிந்துகொண்டுள்ளனா். குருவின் தியாகத்தை அடுத்த தலைமுறையினா் அறிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். எனவே, எச்.குருவுக்கு நினைவிடம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் அவரது அஸ்தியை ஆற்றில் கரைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.