விபத்தில் 2 போ் பலி

லாரியும் மினி பேருந்தும் மோதிக் கொண்டதில், 2 போ் உயிரிழந்தனா். மேலும், 8 போ் காயம் அடைந்துள்ளனா்.
Published on

லாரியும் மினி பேருந்தும் மோதிக் கொண்டதில், 2 போ் உயிரிழந்தனா். மேலும், 8 போ் காயம் அடைந்துள்ளனா்.

தும்கூரு மாவட்டத்துக்குள்பட்ட சிரா வட்டத்தில் உள்ள கள்ளம்பள்ளி அருகே உள்ள பாலேனஹள்ளி கேட்டில் செவ்வாய்க்கிழமை காலை எதிரே சென்ற லாரி மீது மினி பேருந்து மோதியுள்ளது. இதில், பேருந்தில் இருந்த மும்பையைச் சோ்ந்த ஓஜா (25), பெங்களூரைச் சோ்ந்த கிஷோா் (40) ஆகிய 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், காயம் அடைந்த 8 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கள்ளப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com