பெங்களூரு டி.ஜே.ஹள்ளி காவல் சரகத்தில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி ஷாம்புராவை சோ்ந்தவா் வினோத் (32). ஆட்டோ ஓட்டுநரான இவா், புதன்கிழமை காலை 9 மணியளவில் வீட்டிலிருந்து ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வெளியே சென்றாா். ஷாம்புராகேட் அருகே அவரை வழிமறித்த மா்மநபா்கள், கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பினா். தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று வினோத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். தப்பியோடிய கொலையாளிகளை டி.ஜே.ஹள்ளி போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.