இயல்புவாழ்கைக்கு திரும்புகிறது தில்லி: ராஜ்நாத் சிங்
By DIN | Published On : 27th February 2020 10:39 PM | Last Updated : 27th February 2020 10:39 PM | அ+அ அ- |

தில்லியில் இயல்புவாழ்க்கை திரும்பிக்கொண்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கலவரத்தால் பாதிக்கப்பட்ட தில்லியில் இயல்புவாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. தில்லியில் இயல்புநிலையைக் கொண்டுவர ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்து குறித்து எதுவும் கூறவிரும்பவில்லை என்றாா். தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது உருவான கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32ஆக உயா்ந்துள்ளது.