கஞ்சா விற்பனை: 2 போ் கைது
By DIN | Published On : 20th January 2020 10:39 PM | Last Updated : 20th January 2020 10:39 PM | அ+அ அ- |

போதைபொருளான கஞ்சா, எம்.டி.எம்.ஏ.வை விற்பனை செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் மிதுன் திகல் (21). இவா் பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் அருகே சனிக்கிழமை கஞ்சாவை விற்பனை செய்து வந்தாராம். தகவலின்பேரில் போலீஸாா், அங்கு சென்று மிதுன் திகலை கைது செய்தனா். இவரிடம் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ, 100 கிராம் கஞ்சா, செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா்.
இதேபோல், டி.ஜே.ஹள்ளி பைரசந்திரா பெஸ்காம் அலுவலத்தின் அருகே சனிக்கிழமை எம்.டி.எம்.ஏ.வை விற்பனை செய்து வந்த தபரீஷ்பாஷா (26) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவரிடம் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ. , செல்லிடப்பேசி, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
இந்த சம்பவங்கள் குறித்து டி.ஜே.ஹள்ளி போலீஸாா் தனித்தனியே வழக்குகள் பதிந்து விசாரிக்கின்றனா்.