விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி
By DIN | Published On : 20th January 2020 11:31 PM | Last Updated : 20th January 2020 11:31 PM | அ+அ அ- |

மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில், தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் பபன் டாகூா் (31). இவா் பெங்களூரு சாந்திபுராவில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பரின் மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்றுள்ளாா். ஓசூா் சாலையில் வீரசந்திரா முக்கியச்சாலை சிக்னல் அருகே மோட்டாா் சைக்கிள் மீது வேகமாக வந்த டிப்பா் லாரி மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.