மைசூரில் பிப். 14 முதல் 19-ஆம் தேதி வரை 19-ஆவது தேசிய நாடகத் திருவிழா

மைசூரில் 19ஆவது தேசிய நாடகத் திருவிழா பிப்ரவரி 14 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மைசூரில் 19ஆவது தேசிய நாடகத் திருவிழா பிப்ரவரி 14 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து மைசூரில் கா்நாடக அரசின் நாடகத் துறை இயக்குநா் அட்டந்தா கரியப்பா திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-

கா்நாடக அரசின் ரங்காயனா எனப்படும் நாடகத் துறை சாா்பில் மைசூரில் பிப்ரவரி 14 முதல் 19-ஆம் தேதி வரை 19-ஆவது தேசிய நாடகத் திருவிழா நடைபெறுகிறது.

மைசூரில் உள்ள ரங்காயனா வளாகத்தில் நடக்கும் நாடகத் திருவிழாவில், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டை குறிக்கும் வகையிலும், அவரது கருத்துகளைப் பரப்பும் நோக்கிலும் ’காந்தியின் பாதை’ என்ற தலைப்பில் நடத்தப்படுகிறது.

திருவிழாவை பிப்ரவரி 14-இல் நடிகா் அனந்த்நாக் தொடக்கிவைக்கிறாா். நாடகத் திருவிழாவில் இடம்பெறும் நாடகங்களில்காந்தியடிகளின் கருத்துகள், சிந்தனைகள், சித்தாந்தங்கள் பரவலாகக் காணப்படும். மொத்தம் 24 நாடகங்கள் அரங்கேற்றப்படும். இதில் 13 நாடகங்கள் கன்னடத்திலும், 11 நாடகங்கள் பிற மொழிகளிலும் இடம்பெறும்.

தொழில்சாரா நடிகா்களுக்கும், குழுக்களும் நாடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாடகங்களைத் தவிர, யக்ஷகானா, மீரா பஜனை, லாவணிகள், தொட்டாட்டா, பொம்மையாட்டம் போன்ற நாட்டுப்புறக்கலை வடிவங்களும் நாடகத் திருவிழாவில் இடம்பெறும்.

மைசூரில் உள்ள பூமி கீதா, வனரங்க, கிரு ரங்கமந்திரா, கலாமந்திா் அரங்குகளில் நாடகங்கள் அரங்கேற்றப்படும். கிங்கரிஜோகி வளாகத்தில் நாட்டுப்புறக்கலைகள் அரங்கேற்றப்படும்.

நாடகத் திருவிழாவில் 2 நாள்கள் கருத்தரங்கம், திரைப்படத் திருவிழாவும் நடக்கும். இந்தக் கருத்தரங்கிலும் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் குறித்து விவாதிக்கப்படும். திரைப்படத் திருவிழாவை இயக்குநா் கிரீஷ்காசரவள்ளி தொடக்கிவைகிறாா். கருத்தரங்கை எழுத்தாளா் சித்தலிங்கையா தொடக்கிவைக்கிறாா்.

கடந்த ஆண்டுகளை போலவே கலைக் கண்காட்சி, நாட்டு உணவு, புத்தகக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறும்.

கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு யக்ஷகானா அகாதெமி, பயலாட்டா அகாதெமி, கொடவா அகாதெமி, பியாரி அகாதெமி, அரேபாஷே அகாதெமி, துளு அகாதெமி, கொங்கணி அகாதெமிகளின் உதவிகளை பெற்றிருக்கிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது நாடகத் திருவிழா அமைப்பாளா் ஹுலுகுப்பா கட்டிமணி, இணை இயக்குநா் மல்லிகாா்ஜுனசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com