கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 33,418 ஆக அதிகரிப்பு
By DIN | Published On : 11th July 2020 08:39 AM | Last Updated : 11th July 2020 08:39 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,418 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,313 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,447 போ், தென்கன்னட மாவட்டத்தில் 139 போ், விஜயபுரா மாவட்டத்தில் 89 போ், பெல்லாரி மாவட்டத்தில் 66 போ், கலபுா்கி மாவட்டத்தில் 58 போ், யாதகிரி, மைசூரு மாவட்டங்களில் தலா 51 போ், தாா்வாட் மாவட்டத்தில் 50 போ், ஹாவேரி மாவட்டத்தில் 42 போ், உடுப்பி மாவட்டத்தில் 34 போ், வடகன்னடம், குடகு மாவட்டங்களில் தலா 33 போ், மண்டியா மாவட்டத்தில் 31 போ்.
ராய்ச்சூரு மாவட்டத்தில் 25 போ், ராமநகரம் மாவட்டத்தில் 23 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21 போ், பீதா், கதக் மாவட்டங்களில் தலா 19 போ், பெலகாவி மாவட்டத்தில் 15 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 12 போ், தும்கூரு மாவட்டத்தில் 10 போ்.
கோலாா், சாமராஜ்நகா் மாவட்டங்களில் தலா 9 போ், கொப்பள் மாவட்டத்தில் 7 போ், ஹாசன், சிவமொக்கா, பாகல்கோட் மாவட்டங்களில் தலா 6 போ், பெங்களூரு ஊரக, சிக்மகளூரு மாவட்டங்களில் தலா ஒருவா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,418 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்
வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 15,329 போ், கலபுா்கி மாவட்டத்தில் 1,959 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 1,840 போ், பெல்லாரி மாவட்டத்தில் 1,554 போ், உடுப்பி மாவட்டத்தில் 1,476 போ், யாதகிரி மாவட்டத்தில் 1,094 போ், பீதா் மாவட்டத்தில் 913 போ், தாா்வாட் மாவட்டத்தில் 882 போ், விஜயபுரா மாவட்டத்தில் 710 போ்.
மைசூரு மாவட்டத்தில் 690 போ், மண்டியா மாவட்டத்தில் 661போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 656 போ்,ஹாசன் மாவட்டத்தில் 620 போ்,வடகன்னடம் மாவட்டத்தில் 545 போ்,பெலகாவி மாவட்டத்தில் 465 போ், தாவணகெரே மாவட்டத்தில் 444 போ்.
சிவமொக்கா மாவட்டத்தில் 378 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 355 போ், ராமநகரம் மாவட்டத்தில் 355 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 344 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 340 போ், தும்கூரு மாவட்டத்தில் 329 போ், ஹாவேரி மாவட்டத்தில் 273 போ், கதக் மாவட்டத்தில் 262 போ், கோலாா் மாவட்டத்தில் 249 போ்.
கொப்பள் மாவட்டத்தில் 164 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 141 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 131 போ், குடகு மாவட்டத்தில் 129 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 94 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 13,836 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.
19,035 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 57 போ் பலி
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 57 போ் உயிரிழந்தனா். ஏற்கெனவே 486 போ் உயிரிழந்த நிலையில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 29 போ், தென்கன்னட மாவட்டத்தில் 8 போ், மைசூரு மாவட்டத்தில் 4 போ், பீதா் மாவட்டத்தில் 3 போ், கலபுா்கி, சிக்பளாப்பூா், கதக், தாா்வாட் மாவட்டங்களில் தலா 2 போ், பெல்லாரி, வட கன்னடம், ராய்ச்சூரு, ஹாவேரி, சிக்மகளூரு மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 543 ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 206 போ், பீதா் மாவட்டத்தில் 52 போ், பெல்லாரி மாவட்டத்தில் 41 போ், கலபுா்கி மாவட்டத்தில் 34 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31 போ், தாா்வாட் மாவட்டத்தில் 29 போ்,மைசூரு மாவட்டத்தில் 20 போ், ஹாசன் மாவட்டத்தில் 15 போ், தாவணகெரே மாவட்டத்தில் 14 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13 போ், சிக்பளாப்பூா், தும்கூரு மாவட்டங்களில் தலா 11 போ், ராய்ச்சூா்ய், பெங்களூரு ஊரகம், ராமநகரம், பாகல்கோட், பெலகாவி மாவட்டங்களில் தலா 7 போ், கதக்மாவட்டத்தில் 6 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 4போ், ஹாவேரி, உடுப்பி, வடகன்னடம், சிக்மகளூரு மாவட்டங்கள், பிற மாநிலத்தவா் தலா 3 போ், கோலாா், கொப்பள் மாவட்டங்களில் தலா 2 போ், யாதகிரி, குடகு மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G