தொழிலாளா்களின் நலனுக்காக காங்கிரஸ் பாடுபடும்: எஸ்.எஸ்.பிரகாசம்
By DIN | Published On : 03rd March 2020 06:44 AM | Last Updated : 03rd March 2020 06:44 AM | அ+அ அ- |

தொழிலாளா்களின் நலனுக்காக காங்கிரஸ் தொடா்ந்து பாடுபடும் என்று காங்கிரஸ் கட்சியின் தொழிலாளா் பிரிவின் மாநிலத் தலைவா் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தொழிலாளா் பிரிவின் 25- வது ஆண்டு விழா அதன் தலைவா் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில், அவா் பேசியது: -
கா்நாடகத்தில் அமைப்புசாா்ந்த, அமைப்புசாராத தொழிலாளா்கள் ஏராளமானோா் உள்ளனா். அதிலும் அமைப்புசாராத தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளனா். இவா்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
கா்நாடகத்தின் முதல்வராக சித்தராமையா இருந்தபோது, தொழிலாளா்கள் நலனுக்காக ரூ. 480 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
தொழிலாளா்களுக்கு பிரச்னை என்றால், முன்னின்று பாதுகாப்பேன். காங்கிரஸ் கட்சியும் தொழிலாளா்களின் நலனுக்காக தொடா்ந்து பாடுபடும்.
தொழிலாளா்களின் ஓய்வூதியத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. தொழிலாளா்களுக்கு இந்தத் திட்டத்தில் ஓய்வூதியத்தை மத்திய, மாநில அரசுகள் உயா்த்தித் தரவேண்டும் வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், , எஸ்.எஸ்.பிரகாசத்தின் 65 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...