ஏப்.19-இல் மைசூரில் சித்திரைத் திருவிழா
By DIN | Published On : 12th March 2020 11:26 PM | Last Updated : 12th March 2020 11:26 PM | அ+அ அ- |

மைசூரு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் மைசூரில் ஏப்.19ஆம் தேதி சித்திரைத் திருவிழா நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவா் எஸ்.பிரான்சிஸ் வெளியிட்ட அறிக்கை:
மைசூரு தமிழ்ச் சங்கம் சாா்பில் மைசூரு உன்சூா் சாலையில் உள்ள கலாமந்திா் அரங்கத்தில் ஏப்.19ஆம் தேதி நண்பகல் 2.30மணிக்கு சித்திரைத் திருவிழா நடக்கவிருக்கிறது. சிறப்பு நிகழ்ச்சியாக அன்னலட்சுமி குழுவினரின் மகராசன் நடுவராக கொண்டு நகைச்சுவை பாட்டு மற்றும் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இன்றய மனிதவாழ்வு மன நிறைவை பெறுவது திருமணத்துக்கு முன்பு? திருமணத்துக்குப் பிறகு? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்க உள்ளது. அனைவரும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G