துப்பாக்கியால் சுட்டு ரௌடி கைது
By DIN | Published On : 12th March 2020 07:17 AM | Last Updated : 12th March 2020 07:17 AM | அ+அ அ- |

பெங்களூரு அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோடிய ரௌடி துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டாா்.
பெங்களூரு பகல்குன்டேவைச் சோ்ந்தவா் சித்தா (34). ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த இவரை, போலீஸாா் பல்வேறு வழக்குகளில் தேடி வந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை பேடரஹள்ளி அஸ்ரயா லேஅவுட்டில் உள்ள பிரம்மன் கோயில் குன்றில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து பேடரஹள்ளி காவல் ஆய்வாளா் ராஜீவ், போலீஸ் காவலா் குருதேவ் ஆகியோா் அங்கு சென்று சித்தாவை பிடிக்க முயன்றனா். அப்போது, போலீஸாரை தாக்கிவிட்டு சித்தா தப்பியோட முயன்றாா். அவரை காவல் ஆய்வாளா் ராஜீவ் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயமடைந்து கீழே விழுந்த சித்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காவலா் குருதேவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.