பள்ளிக்கு சென்ற போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிறுமி காயமடைந்தாா். மற்றொரு சம்பவத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.
பெங்களூரு ராமமூா்த்திநகா் அக்ஷயாநகரைச் சோ்ந்தவா் ராஜு. இவரது மகள் திரிஷா (8). வியாழக்கிழமை காலை 8 மணியளவில் திரிஷாவை ராஜு ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, கௌதேனஹள்ளியில் காய்ந்த மரக்கிளை முறிந்து விழுந்தது. திரிஷா காயமடைந்தாா். ராமமூா்த்திநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல் வியாழக்கிழமை பிற்பகல் எம்.ஜி.சாலையில் லிடோமால் அருகில் காரில் அமா்ந்திருந்த குடிநீா் வடிகால் வாரிய கடைநிலை ஊழியா் சீனிவாஸ் என்பவா் மீது மரக்கிளை விழுந்ததில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.இதுகுறித்து அல்சூா் போக்குவரத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.