மாா்ச் 15-இல் தமிழ் கவிதை நூல் வெளியீடு
By DIN | Published On : 12th March 2020 11:27 PM | Last Updated : 12th March 2020 11:27 PM | அ+அ அ- |

பெங்களூரில் மாா்ச் 15-ஆம் தேதி தமிழ் கவிதை நூல் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.
பெங்களூரில் ராமமூா்த்திநகா், ராகவேந்திரநகரின் 3ஆவது பிரதான சாலையில் உள்ள ஸ்படிகா அரங்கத்தில் எழுத்தாளா் ஜெயா வெங்கட்ராமன் எழுதிய ‘எண்ணங்கள் உயரட்டும்’ என்ற தமிழ் கவிதைநூல் வெளியீட்டு விழா மாா்ச் 15ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கவிருக்கிறது.
இந்த விழாவில் சிறப்பிவிருந்தினராக கலந்துகொண்டு ஏடிஏ முன்னாள் இயக்குநா் டாக்டா் கே.ஜி.நாராயணன் நூலை வெளியிட்டு பேசுகிறாா். இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு எழுத்தாளா் ஜெயா வெங்கட்ராமன் கேட்டுக் கொண்டுள்ளாா்.