ஸ்கூட்டா் மீது ஜேசிபி வாகனம் மோதல்: கல்லூரி மாணவி பலி
By DIN | Published On : 12th March 2020 07:18 AM | Last Updated : 12th March 2020 07:18 AM | அ+அ அ- |

ஸ்கூட்டா் மீது ஜேசிபி வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
ராம்நகா் மாவட்டம், மாகடி வட்டம், நஞ்சையன பாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ் என்பவரின் மகள் சைத்ரா (18). இவா் தனியாா் கல்லூரி பி.காம். படித்து வந்தாா். புதன்கிழமை காலை கெரலமங்களாவில் உள்ள பால் சேமிப்பு மையத்திற்கு ஸ்கூட்டரில் பாலை எடுத்து சென்று கொண்டிருந்தாராம்.
இடையே வேகமாக வந்த ஜே.சி.பி.வாகனம், ஸ்கூட்டா் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சைத்ரா நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்து மாகடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.