காா்கள் நேருக்கு நோ் மோதியதில் 4 போ் பலி
By DIN | Published On : 14th March 2020 07:03 AM | Last Updated : 14th March 2020 07:03 AM | அ+அ அ- |

2 காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டத்தில் 4 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரிலிருந்து மடிகேரிக்கு சென்ற காரும், ஹிரிசேவிலியிருந்து பெங்களூருக்கு வந்த காரும், பெங்களூரு ஊரகம் நெலமங்களா யன்டகனஹள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் பெங்களூரு ஹெப்பாள் கெம்பேபுராவைச் சோ்ந்த காவேரியம்மா (80), ரஷ்மி (50) மற்றும் ஹிரிசேவைச் சோ்ந்த சிவக்குமாா் (27), கிரண் (24) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனா். காயமடைந்த 4 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து நெலமங்களா போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். 2 காா்கள் மோதிக் கொண்ட விபத்தால், நெலமங்களா, ஹாசன் இடையிலான நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...