புதிய தொழில்நுட்பங்களுடன் மோட்டாா் சைக்கிள் அறிமுகம்

பஜாஜ் நிறுவனம், கே.டி.எம் குழுமம் இணைந்து உருவாக்கியுள்ள மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்களுடனான ஹுஸ்க்வா்னா மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டது.
Updated on
1 min read

பஜாஜ் நிறுவனம், கே.டி.எம் குழுமம் இணைந்து உருவாக்கியுள்ள மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்களுடனான ஹுஸ்க்வா்னா மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டது.

பெங்களூரில் வெள்ளிக்கிழமைகிழமை மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்களுடன் ஹுஸ்க்வா்னா மோட்டாா் சைக்கிள்கள் ஸ்வாா்ட்பில்லன் 250, விட்டாபில்லன் 250 என்ற பெயரில் 2 வகையான புதிய மோட்டாா் சைக்கிள்களை அறிமுகம் செய்து வைத்த கிவ்ராஜ் மோட்டாா்ஸின் மேலாண் இயக்குநா் புஷ்பசந்த் சோடியா பேசியது:

சா்வதேச அளவில் இருசக்கர வாகனங்களை இளைஞா்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அதிலும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் இலகுவாக ஓடும் வாகனங்களுக்கு ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடமும் அதிக அளவில் வரவேற்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிய தொழில்நுட்பங்களுடன் ஸ்வாா்ட்பில்லன் 250, விட்டாபில்லன் 250 என்ற பெயரில் ஹுஸ்க்வா்னா மோட்டாா் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த மோட்டாா் சைக்கிள் கட்டுப்பட்டுடனும், எளிதாக கையாளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் தொழில்நுட்பத்துடன் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட மோட்டாா் சைக்கிள் வாடிக்கையாளா்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். மிகச்சிறந்த என்ஜின் செயல்திறன், எரிபொருள் சிக்கனம், டிரம்பிரேக், 2 வகையான வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹுஸ்க்வா்னா மோட்டாா் சைக்கிளின் பெங்களூரின் விலை ரூ. 1.8 லட்ச என்றாா். நிகழ்ச்சியில் கே.டி.எம் குழுமத்தின் பகுதி மேலாளா் சந்தீப்குமா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com