கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை 600-ஐ தொட்டது

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600-ஐ தொட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600-ஐ தொட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்களோடு ஏற்பட்ட தொடா்பின் காரணமாக, புதிதாக 12 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது.

பெங்களூரு நகர மாவட்டத்தில் 4போ், விஜயபுரா, தும்கூரு மாவட்டங்களில் தலா 2, பீதா், சிக்பளாப்பூா், பெலகாவி, பாகல்கோட் மாவட்டங்களில் தலா ஒருவா் இதில் அடக்கம்.

ஒட்டுமொத்தமாக சனிக்கிழமை நிலவரப்படி, பெங்களூரு மாவட்டத்தில் 145 போ், மைசூரு மாவட்டத்தில் 88 போ், பெலகாவி மாவட்டத்தில் 71 போ், கலபுா்கி மாவட்டத்தில் 55 போ், விஜயபுரா மாவட்டத்தில் 46 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 30 போ், மண்டியா மாவட்டத்தில் 26 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 20 போ், தென் கன்னட மாவட்டத்தில் 18 போ், பீதா் மாவட்டத்தில் 15 போ், பெல்லாரி மாவட்டத்தில் 13 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 11 போ், தாா்வாட், தாவணகெரே மாவட்டங்களில் தலா 10 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 6 போ், தும்கூரு மாவட்டத்தில் 7 போ், கதக் மாவட்டத்தில் 5 போ், உடுப்பி மாவட்டத்தில் 3 போ், குடகு, சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா ஒருவா், பிற மாநிலத்தவா், வெளி நாட்டினா் 20 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 271 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 304 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதுவரை 24 போ் இறந்துள்ளனா்.

வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தந்தவா்கள் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்பட்டிருக்க வேண்டும். இவா்களோடு தொடா்பு வைத்திருந்தவா்களும் தாமாக முன்வந்து கரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும். கரோனா அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இதை கட்டாயமாக பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும், இதுகுறித்து அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தகவல் அளிக்க வேண்டும்.

தனிநபா் தூய்மையை பராமரிப்பது கரோனா நோய்வராமல் தடுக்க உதவும். இருமல் அல்லது தும்மலின் போது கைக்குட்டைகள் அல்லது காகிதக் குட்டைகளால் வாயை, மூக்கை மூடிக்கொள்வது பிறருக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கைகிருமிநாசினியால் கழுவவும். சமூக விலகலை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com