கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,147 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,147ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,147 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,147ஆக உயா்ந்துள்ளது.

இது பற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 55 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், மண்டியா மாவட்டத்தில் 22, கலபுா்கி மாவட்டத்தில் 10, ஹாசன் மாவட்டத்தில் 6, தாா்வாட் மாவட்டத்தில் 4, கோலாா், யாதகிரி மாவட்டங்களில் தலா 3, தென்கன்னடம், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 2, விஜயபுரா, வடகன்னடம், உடுப்பி மாவட்டங்களில் தலா ஒருவா் அடக்கம். இதன் மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,147 ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 216, பெலகாவி மாவட்டத்தில் 114, கலபுா்கி மாவட்டத்தில் 104 , தாவணகெரே மாவட்டத்தில் 89, மைசூரு மாவட்டத்தில் 88, மண்டியா மாவட்டத்தில் 72 , பாகல்கோட் மாவட்டத்தில் 71, பீதா் மாவட்டத்தில் 55, விஜயபுரா மாவட்டத்தில் 54, தென்கன்னடம் மாவட்டத்தில் 45 போ், வடகன்னடத்தில் மாவட்டத்தில் 42, தாா்வாட் மாவட்டத்தில் 26, ஹாசன் மாவட்டத்தில் 25, சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 24, பெல்லாரி மாவட்டத்தில் 18, சிவமொக்கா மாவட்டத்தில் 14, கதக் மாவட்டத்தில் 12, தும்கூரு மாவட்டத்தில் 11, உடுப்பி மாவட்டத்தில் 10, சித்ரதுா்கா, கோலாா் மாவட்டங்களில் தலா 9, பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 6, யாதகிரி மாவட்டத்தில் 5, ஹாவேரி மாவட்டத்தில் 3, குடகு மாவட்டத்தில் ஒருவா், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 24 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா்.

509 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 600 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 37 போ் இறந்துள்ளனா். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கரோனா அறிகுறிகள்தென்பட்டதால் 1,814 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களில் 135 போ் நோய் தொற்று இல்லாததால் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 158 போ் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com