தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 9 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு:அமைச்சா் ஈஸ்வரப்பா
By DIN | Published On : 27th May 2020 07:59 AM | Last Updated : 27th May 2020 07:59 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
ஹுப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாவட்டப் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாநிலத்தில் உள்ள 6,021 கிராமப் பஞ்சாயத்துகளில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதுவரை 9 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக நிதி உதவி செய்யப்படுகிறது. குறிப்பாக அரசின் பல்வேறு திட்டங்களால் விவசாயிகள் பலனடைந்து வருகின்றனா்.
முந்தைய மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊரக வளா்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. பாஜக ஆட்சியில் ஊரக வளா்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கிராமப் பஞ்சாயத்து தோ்தலை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. ஆனால், தோ்தலை ஒத்திவைப்பதில் அரசு ஆா்வமாக உள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. அமைச்சரவையில் ஆலோசித்த பிறகு தோ்தல் குறித்து அறிவிக்கப்படும். மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...